எனைப்போல் நீயும் நட்பே

அழுகையில் அரவணைக்கும்
அன்னையின் முத்தம்போல்
ஆசானின் மூத்தவராம்
தந்தையின் சொல்போல் ,,,

இடர்களை நீக்கிவிடும்
சகோதரத்தின் இணைபோல்
பாதியிலே வந்தாலும்
உயிர் வாழ்க்கை துணைபோல் ,,,

வயோதிகத்தின் வழியாக
வலுசேர்க்கும் பிள்ளைபோல்
வீர்கொண்டு பணிசெய்யும்
கண்காக்கும் இமைபோல் ,,,

இன்பத்தின் வெற்றியிலே
மலர்ந்திடும் மனம்போல்
சோகங்கள் சேர்ந்துவர
வாட்டிடும் தனிமைபோல் ,,,

மேகங்கள் கைகுலுக்க
பிறந்திடும் மின்னல்போல்
கார்மேகம் சிலிர்த்திட
பொழிந்திடும் மழைபோல் ,,,

தித்திக்கும் சுவையாகும்
அணில் கடித்த பழம்போல்
என்னுயிர் நட்பே என்றும்
நீயிங்கு எனைப்போல் ,,,

என்றும் உங்கள் நட்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (1-Feb-16, 9:16 pm)
பார்வை : 177

மேலே