உயிர்த்தெழும் ஞாபகங்கள்
#ஒரு சொல்லப்படாத காதலின் சுயசரிதம் இது!(இதயம் - காதலுக்கு உட்படும்போதும், காதல் -இதயத்தின் உட்புகும்போதும் மயிற்பீலி கொண்டு எழுதப்பட்ட கல்வெட்டாய் மனம் மாறிவிடுகிறது அப்படிப்பட்ட ஒரு கல்வெட்டின் பரிணாம வளர்ச்சியடைந்த உணர்ச்சிகளின் வரிவடிவம் இது. உண்மையில் காதலின் தூரிகை எந்த ஒரு மனித மனதையும் விட்டுவைப்பதில்லை. அப்படி மனசுக்குள் சில சொட்டு மட்டும் தூரிவிட்டு சட்டென்று நின்றுவிட்ட ஒருஞ வசந்த மழையின் ம(ன)ண் வாசனை வாசிப்பிற்குரியதாய் மொழிபெயர்க்கப்படுகிறது.........,
நிஜம்தான்
காதல் ஒரு (வி)சித்திரவதைதான்
சிட்டுக்குருவியின் முதுகில்
சிலுவை அறைவதும்
வெற்று மனத்தாளில்
கவிதை வரைவதும்
காதலின் வேலலைதான்
காதலிக்குத் திருமணம் என்
காதலுக்குத் தகணம்!
என் இமயம்
இடம்பெயர்ந்துவிட்டது!
தாவனிப் பூவினிப் பூக்காது
எனக்கு மட்டும்
கிழக்கில் அஸ்தமனம்!
முடிவில்....
என் மூன்றுவரி தேசியகீதம் (I Love you)
மூர்ச்சையாகிவிட்டது.
என்
நான்கு ஆண்டு தொடர் வசந்தம்
நடுவழியில் திசை புரண்டது
நாட்காட்டியும் நானும் சமம்
இருவருக்கும் இனி இலையுதிர் காலம்தான்
ஆயுள் முழுவதும்!
அந்த ஒரு உதயத்தில்
என் நிகழ்காலம்
இருண்டுபோனது
எதிர்காலம் இறந்துபோனது!
நிகழ்கால நிஜ இருட்டில்
கண்மூடித் தேடுகின்றேன் என்(நம்)
கடந்தகாலக் கனவுகளை!
இன்று என் வானவில்
நிறங்களை நிராகரிக்கறது
கறுப்பைத் தவிர!
என் பூமியில்
பூக்கள் அழுகின்றன
வண்டுகளை விசாரித்தேன்
என் காதலுக்கான கண்ணீர் அஞ்சலியாம்!
உன் இதயம் தொட்டுஙரும்
co2- வையே சுவாசித்த எனக்கு
ஆக்ஸிஜன் இன்று
அந்நியமாய்த் தெரிகிறது
சுவாசிக்கச் சொன்னால்
அடம்பிடிக்கும் இதயம் - அந்த
Co2 - வையே யாசித்து "நிற்க்கிறது!'
இருந்தும் இன்னும் நான் சுவாசிக்கின்றேன்
நம் இறந்த காலத்தில்
மௌனம் பூசிய அந்த
மரத்தடியில்....
எனக்கு மட்டும் ஒளியூட்டும்
உன் விழிவிடியல்
நீ பேசிய பாடல்
நினைவுகளின் அசைபோடல்....
இப்படியாக
இன்னும் நான் சுவாசிக்கின்றேன்
நம் இறந்த காலத்தில்!
'ஏய்' மௌனத்திற்குப் பிறந்தவளே!
உன் தாய்மொழிப் பற்று
தண்டனைக்குரியதென்று
எனக்கு மட்டும்
கேட்கும் குரலில்
எத்தனை முறை
கத்தியிருப்பேன்!
சப்தங்களால் சபிக்கப்பட்ட
என் வார்த்தைகள்
மறுமணம் செய்துக்கொண்டது
மவுனத்தைத்தான்
அந்த இறந்துபோன நான்கு வருடம்
இன்றும் எந்தன் நெஞ்சை வருடும்
ஈமக்கிரியை பத்திரிக்கைக் கண்டு
உன் திருமணத்திற்கு வந்தவன்
உன்னை ஆசீர்வதிக்குமாறு
சபிக்கப்பட்டேன்
வேடந்தாங்கள் வந்த பறவை
சிறகை மறந்துவிட்டு செல்வது மாதிரி
உடலுக்கும் உயிருக்கும்
இரண்டடி இடைவெளியில்
வெளியேறினேன்
ஆம்!
ஊமையர் மாநாட்டில்
இந்த ஒலிப்பெருக்கியின் ராஜினாமா
அர்த்தமுள்ளதுதானே?
அப்போதைய
'பருவ'க்குளிருக்கு
'காம'க் கம்பளி
இதமாய் இருந்ததுதான்
எனினும்
காலத்தைக் கழித்தாலும்
நினைவுகள் நிலைப்பதுபோல்
காமத்தைக் கழித்தால்கூட
காதல்தான் எஞ்சி நிற்கும்!
பூமியின் சுழற்ச்சி
ராத்திரி - பகல் மாதிரி
உணர்வுகளுக்குள்ளும்
சில உள்மாறுதல்களை
உண்டாக்கி விடுகிறது
என் இந்த நிமிசத்துக் காதலில்
காமக்கலப்படம் துளியுமில்லை
ஒரு தாய்ப்பால் போல்
தூய அன்பில் தோய்ந்திருக்கிறது!
காலப்போக்கில்
காதலும் கூட
பரிணாம வளர்ச்சி பெற்றுவிடுகிறது
குரங்கிலிருந்து மனிதனாக அல்ல
மனிதனிலிருந்து தேவனாக!
இப்போது
காமத்தை அது கழற்றி விட்டது
உள் அன்பு என்னும்
உள்ளாடையை மட்டுமே
உடுத்தியிருக்கிறது
ஏர் பிடித்து வயல் மேயும்
ஓர் இந்திய உழவன் போல்
உள்அன்பு என்னும்
உள்ளாடையை மட்டுமே
உடுத்தியிருக்கிறது!
யானை வரும் பாதையில்
கிடந்த ஒரு வீணையாய்
நொறுங்கிப்போன இதயம்
நினைத்துப் பார்க்கிறது
எப்போதாவது நிகழும் - நம்
காதல் கிரகணத்தில்...
சில நொடிகள் நீளும் நம்
அத்திப்பூ சந்திப்புகளில்
நாக்கு அடம் பிடித்ததையும்
கண்கள் உன்னைப் படம்பிடித்ததையும்
நினைத்துப் பார்க்கிறது!
கண்களுக்குள் கண்ணீர்
உறைந்து கிடக்கிறது
கடந்தகால ஞாபகம்
கதவு தட்டும்போதெல்லாம்
கரைந்துவிடுகிறது!
இப்போதும்
தூரிடும் வேளைகளில்
பீரிடும் ஞாபகங்கள்
போரிடும் உணர்ச்சிகள்
கூறிடும் வார்த்தைகள்
இவைதான்
"ஏ!நவம்பர் மாதத்து
ஐந்தாம் இரவே
நீ இறவாத இரவாக
இருந்திருக்கக்கூடாதா?
*நவம்பர் 6 காதலியின் திருமணம்)