காதலின் வலி ---- வஞ்சித் தாழிசை
மயங்கிடும் மாலையிலே !
தயங்கியும் சோலையிலே !
வியந்திடும் வேளையிலே!
துயரமும் ஏனடியோ ?
எழில்மிகும் தேவதையே !
மொழியியல் கண்மணியே !
பொழிலிடைப் பைங்கிளியே !
அழிப்பதும் ஏனடியோ ?
சிலைகளும் பேசிடுமோ ?
விலைதனைக் கேட்டிடுமோ ?
மலைகளும் நின்றிடுமோ ?
நிலைகளும் ஏனடியோ ?