கண்ணாடிச் சில்லுகள்2
கண்ணாடிச் சில்லுகள்.(2)
=========================================ருத்ரா
உன்னை நான் பார்த்தேன்
தெரியும்.
என்னை நீ பார்த்தாயா
தெரியாது
அட ஆமாப்பா ஆமா
கோடிக்கணக்கான பேருக்கு
இந்த வியாதி தான்.
____________________________________________
உன் மெகந்தியில்
நான் இருப்பேன்.
என் சிகரெட்டில்
நீ இருப்பாய்.
"ந்த...அப்டியே நிப்பாட்டிக்கோ
வொன் டாஸ்மாக்கு
சைடு டிஷ் நான் இல்லே"
____________________________________________
காதலுக்கு
பட்டம் விடுறதெல்லாம் சரி தான்.
அதுக்கு நம்ம "ஸ்பெக்ஸை" நொறுக்கியா
மாஞ்சா அரைப்பே ?
--------------------------------------------------------------------------