இங்கும் அங்குமாக
வாழ்கிறேன் நான்
இங்கும் அங்குமாக
என்னைச் சுற்றி
பூனைகளும் வானரங்களும்
மதிலிலும் மரங்களிலும்
ஒடி விளையாடி என்னைப்
பார்த்து கெக்கிலிக்க
சிட்டுக் குருவிகள்
காலையில் புல் தரையில்
கும்மாளமிட்டு ஆடிப் பாடி
கூவி கூவி அழைத்து என்னைப்
பார்த்து நகைக்க
நாய்கள் பல கூடி
இரவில் குரைத்து
கூக்குரலிட்டு அமைதியை
தூக்கத்தையும் கெடுத்தது போக
என்னைப் பார்த்து கொக்கரிக்க
என் இரு பக்கத்திலும்
சீனக் குடும்பம்
அழகாக வாழ்ந்து என்னைப்
பார்த்து விமர்சிக்க
என் எதிரில் ஒரு தமிழன்
மோட்டார் பழுது பார்க்கும்
வேலை செய்து கொண்டு என்னைப்
பார்த்து சிரிக்க .
சற்றுத் தள்ளி ஒரு மலேய்
குடும்பம் நாசிக் கந்தர் உணவகம்
செம்மையாக நடத்தி என்னைப்
பார்த்துப பரிகசிக்க
உறைவிடமாகக் கொண்டு
வாழ்கிறேன் மொழி
முற்றும் தெரியாமல்
அரைகுறையாக அறிந்து
கேலிக்கு இடமாக
என்னுடைய ஆங்கில அறிவு
எனக்கு இங்கு சிறதளவு
மதிப்பு தற்போது வழங்கி
என்னை உயர்த்திக் காட்ட
நடக்கிறேன் சற்று ஆறுதலுடன்