வேனிற்காலம் -கலீல் ஜிப்ரன்

Summer


Let us go into the fields, my beloved, for the
Time of harvest approaches, and the sun's eyes
Are ripening the grain.
Let us tend the fruit of the earth, as the
Spirit nourishes the grains of Joy from the
Seeds of Love, sowed deep in our hearts.
Let us fill our bins with the products of
Nature, as life fills so abundantly the
Domain of our hearts with her endless bounty.
Let us make the flowers our bed, and the
Sky our blanket, and rest our heads together
Upon pillows of soft hay.
Let us relax after the day's toil, and listen
To the provoking murmur of the brook.

வயல் வழியே செல்வோம்
வா என் அன்புக்குரியவளே !
நெருங்குகிறது
அறுவடைக் காலம் !
சூரியக் கண்கள்
கனியவைக்கும் தானியங்களை !
பாரில் விளைத்திடும்
கனிகளைக்
கண்காணித்து வருவோம்.
இதயத்தின் ஆழத்தில்
விதைக்கும்
காதல் வித்துக்கள்
விளைவிக்கும்
களிப்புத் தானி யங்களை
ஊட்டி வளர்ப்பது
அந்த ஆன்மா !

முடிவில்லாக் கொடைகள்
அளிப்பது இயற்கை !
இதயத்தை ஆட்கொண்டு
வாழ்வு செழிப்படைந்து
மூழ்கிப் போவதால்
நிரம்பட்டும் நமது
சேமிப்புக் களங்சியம்
இயற்கையின் விளைவுப்
பயிர்களால் !
பூக்களால் நமது படுக்கை
ஆக்கப் படட்டும் !
ஆகாயம் நமது போர்வை யாய்
அமையட்டும் !
மெல்லிய வைக்கோல்
தலையணை மேல்
சாயட்டும்
நம்மிரு தலைகளும் !
உடல் உழைப்பில் சற்று
ஓய்வெடுத்து
ஓடை முணு முணுப்பைக்
கேட்போம் நாம் !

எழுதியவர் : கலீல் ஜிப்ரன் (2-Feb-16, 11:45 pm)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 120

மேலே