நீராய் மறையும் மனிதம்

தாமரை தண்டுகள் தாங்கும் இலைகூட
சாமரம் வீசும் சகலர்க்கும். – சேமமாய்
அதன்மேல் இருக்கின்ற நீர்த்துளியோ வெய்யோன்
இதம்பட்டு இல்லாமல் போகும். இகத்தில்
நிதம்மாறும் மாந்தராய் தேவைகள் தீர்ந்ததும்
தாங்கியோர் தன்னை துறந்து.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (3-Feb-16, 2:20 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 93

மேலே