வானவில்லில் முளைத்த வண்ணத் பூச்சே,,,,

ஒரு துளி பனி விழுந்தது பெண்ணே
உன்னால் நெஞ்சில்
என் உயிர் துளி நனைந்தது கண்ணே
உன்னால் என்னில்
முதல் முதல் புது குளிர் அடிக்கிறது
இருதயம் இடம் மாற துடிக்கிறது
காதல் புது மொழி பொழிகிறது
இதயம் இனம் புரியமால் தவிக்கிறது
பெண்ணே உன்னால்
கண்ணே நீ என்னுள்
சற்று முன்பு பார்த்தேன் சாய்ந்தே போனேன் அடி
நீ சற்று தூரம் போக பாரம் தாங்காமல் மண்ணில் வீழ்ந்தே போனேன் அடி
சற்று திரும்பி பார்கையில் காற்றாய் விண்ணில் பறந்தே போனேன் அடி
என் இதயம் வடிவம் மாறுதே
உன் உருவத்தின் நகலாய் மின்னுதே
நீ வருவது வருவது சத்தியம்
கனவிலும் நினைவிலும் என்னில் நீ ஐக்கியம்
பெண்ணே...........,,,,
சாரக்கற்றாய் உடல் குளிருது உன்னால்
கோடி நட்சத்திரங்கள் ஒளிருது உன்னால்
கொதிக்கும் பொன் இடையே
வேண்டாம் பெண் நமக்குள் இடைவெளியே
பக்கத்தில் வந்து வெப்பத்தை தருவாயோ
காதல் பித்தத்தில் மொத்தமாய் வருவாயோ
வானவில்லில் முளைத்த வண்ணத் பூச்சே
காணவில்லை உனை கண்ட நாள் முதல் என் மூச்சே
எங்கு பறந்து போனாய்
ஏனோ பறித்து போனாய்
உன்னால் இல்லாமல் போனது என் மனசுக்கும் இதயத்துக்கும் பேச்சே