நான் உந்தன்
தொடாத காதலன்
சண்டை போடும் சகோதரன்
தோல் சாயும் தோழன்
நடை பழக்கும் தகப்பன்
உன் கனவுகளின் மெழுகுவர்த்தி
விடிகாலை நீ முறிக்கும் சோம்பல்!
உன் வாய்ச்சவடல்களுக்கெல்லாம் செவி!
வெற்றிட நிரப்பி!
கண்ணீர் துடைப்பான்
கவலை நீக்கி!
கோமாளி!
புகார்ப்பெட்டி
சில நேரங்களில் மாமியார்!
பல நேரங்களில் பாவ மன்னிப்பு கொடுக்கும் பாதரியார்!
படுத்துக்கொண்டே பறிக்கும் மாங்கனி!
மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கும் முதல் காதல் கடிதம்!
விளம்பரம் இல்லாத சினிமா!
கோடைத்தூறல்!
ஒளியும் ஒலியும்!
தூரத்து வெளிச்சம்.
இதமான சூடு!
தடையில்லா மின்சாரம்!
வாராத பரிட்ச்சை.
திடீர் விடுமுறை!
பாலில் வரைந்த மீசை!
வண்ணம் தரும் வாழ்க்கை!
நீ வேண்டாம் என்றால்
கருப்பு வெள்ளைக் கணவன்,
வேறோரித்திக்கு!