நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி - சண்முகப்ரியா

மலைக்கள்ளன் திரைப்படத்தில் நடிகை திருமதி பி.பானுமதி ’சண்முகபிரியா’ ராகத்தில் பாடி, ஆடிய ஒரு அருமையான பாடல் ’நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி!’ என்பதாகும்.

இப்பாடல் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் இயற்றியது. இப்பாடலை ஜி.என். பாலசுப்ரமணியன் போன்ற பெரும் பாடகர்களும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

பல்லவி

நல்ல சகுனம் நோக்கிச் செல்லடி! - சென்று
நான்படும் பாடு அவர்க்கே சொல்லடி!

அநுபல்லவி

அல்லல் அகற்றி அன்பர்க்
கானந்தம் அருள் நேசர்,
தில்லைப் பதி நடேசர்
திருவுள்ளம் அறிய நீ! (நல்ல சகுனம்)

சரணம்

வண்ணமலர்க ளேதும்
வாசம் தருவதில்லை;
பண்ணில் இனிமையில்லை,
பாலிற் சுவையுமில்லை;
கண்ணில் உறக்கமில்லை,
கருத்தோர் நிலையிலில்லை;
எண்ணி அளப்பதேனோ?
எல்லாம் அறிவாயோடி?
புண்ணியம் உண்டடி,
பொற்கொடியே! உனக்கு (நல்ல சகுனம்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Feb-16, 10:21 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 224

சிறந்த கட்டுரைகள்

மேலே