சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா
எம்.ஜி.ஆர் – பி.பானுமதி நடித்த நாடோடிமன்னன் (1958) திரைப்படத்தில், கவிஞர் முத்துக்கூத்தன் இயற்றி, எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைப்பில் பி.பானுமதி பாடிய ’சம்மதமா, நான் உங்கள் கூட வர சம்மதமா’ என்ற பாடல் அருமையானதாகும். யு ட்யூபில் பார்த்தும், கேட்டும் ரசிக்கலாம்.
சம்மதமா…..சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா, நான் உங்கள் கூட வர சம்மதமா
வெகு தூரம் தனியே போவது அபாயம்
வெகு தூரம் தனியே போவது அபாயம்
தகுந்த துணை என்னைப் போலே
ஒன்றுதான் அவசியம் (என்ன)
தகுந்த துணை உங்களைப் போலே
ஒன்றுதான் அவசியம்
சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா நான் உங்கள் கூட வர
சம்மதமா
கோழிக் குஞ்சு கூட இருந்தா
பருந்தை எதிர்க்குமே பருந்தை எதிர்க்குமே
நல்ல வேலி இருந்தா பயிரை அழிக்கும்
ஆட்டைத் தடுக்குமே (கோழி குஞ்சு)
பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம் (நடந்தே)
பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம் (நடந்தே)
மீறி, பசி வந்தாலும் பறவை போலே
பகிர்ந்தே உண்ணலாம்
சம்மதமா
இப்போ சம்மதமா
நான் உங்கள் கூட வர சம்மதமா
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
சம்மதமா (நான் உங்கள்)