காமத்துப் பால் கவிதை-3

"புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோகலப்பேன் கொல்
கண்ணன்ன கேளிர் வரின்"1267

(நீங்கிப்போன என் தலைவன் வரும் போது அவனை தழுவிக் கொள்வேனோ? இல்லை கோபம் கொள்வேனோ? இல்லை அவனோடு ஊடல் கொள்வேனோ? என தலைவி புலம்புவதாய் அமைவது இதன் பொருள்)

கள்வா..........,
நீ
நீங்கிப்போன
நாட்கள்
நரகம்.........,

என்
நிலை கண்டு
அழும்
கண்ணாடி
எண்ணிச்
சொல்லும்
நீ
பிரிந்து
சென்ற
நிமிடம்.........,

கள்வா......,
நீ
மீண்டு வரும்
போது
உன்னை
தழுவிக் கொள்வேன்
என
நினைத்தாயோ?

இல்லை ..........,
மூச்சிரைக்கும்
என்
சினத்தால்
உன்னைத்
தீண்டுவேன்..........,

பொறு..........,
மற்றொரு
உபாயமும் உண்டு.......,
என்
நினைவுகளால்
காய்ந்து போன
உன்
இதயத்தை........,
தூர்த்துப் போன
பின்பும்
என் விழிமழையில்
நனைப்பேன்.........,

அட
என்னழகு

ள்
வா..............,

எழுதியவர் : ஹாதிம் (5-Feb-16, 2:49 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 171

மேலே