வினோத போர்

விழியோடு விழி பார்த்து
வினோத போட்டி நடத்திக்கொண்டோம் நமக்குள்ளே
யார் வெல்ல போகிறார் இதிலே..?!!
சிறிது நேரம் சென்றது
வெற்றி புன்னகையில் நான்
வெல்லாக்குழப்பத்தில் நீ
என் காந்த விழியோடு
ஒட்டிக்கொள்ள முடியவில்லை உன்னால்..?
காரணம்...
என் விழிகளில் இருந்தது
போட்டி மட்டுமே
காதலில் போட்டிகளுக்குள்ளும்
காதல் வேண்டும் அன்பே.!
விழியோடு மட்டுமல்ல
மனதோடும் நீ இருப்பாய்
என்றென்றும்...!!!!!!

எழுதியவர் : பூங்குழலி (5-Feb-16, 2:31 pm)
Tanglish : vinotha por
பார்வை : 77

மேலே