நான் சூரியன் நீ தாமரை
இருள் போர்த்திய
வையம் ஞாயிறு
பொழுதுக்கு தவமிருக்க
நீர்வாழியும் நாணத்தில்
குவிந்து இருந்தாளோ !
சேற்றில் உதித்த
மாசற்ற செந்தாமரை
சுடர்விட்ட பரிதியின்
காதல் வெம்மையால்
இதழ் மலர்ந்தாளோ !
ஒளியாலே மொழி
பேசிய ஆதவன்
பகலொளிக் கதிரால்
ஆரத்தழுவிட கமலம்
காதல் வயப்பட்டாளோ !