இப்புத்தகம் விற்பனைக்கு அல்ல

புதிதாக பதிப்பிக்கபட்ட
புத்தகத்தின் நீட்சியே நாம்
பக்கங்களை புரட்ட ஒட்டிக்கொள்ளும்
இரு தாள்கள் நாம்
புத்தகத்தின் உள்ளடக்கம் நாம்
பதிப்பாளர்கள் நாம்
நூலகம் தேவை இல்லா புத்தகம் நாம்
தினந்தோறும் புத்தக திருவிழா
சிறப்பு விருந்தினர்கள் இல்லா
தினம் ஒரு தொகுப்பு வெளியீடு விழா
புதிதாக பதிப்பிக்கப்பட்ட புத்தகம் நாம் ..!!!