பூவோ பூந் தென்றலோ

பூக்கூடையில் மல்லிகை வாசம்
புன்னகையோ பூமலர்த் தோட்டம்
பூவுக்கோ புன்னகைக்கோ என்று
தென்றலும் திண்டாடும்
நான் நிற்பது தென் தமிழ் மன்றம்
நீ பூவோ பூந் தென்றலோ கொஞ்சம் திரும்பு
என் கவிதை உன்னைக் கொண்டாடும் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Feb-16, 9:04 am)
பார்வை : 190

மேலே