போர்வை
ஞாபக இழைகளால்
நெய்த குளிர்காலக்
கம்பளி
அவ்வப்போது
என்னை
இறுக்கியிருக்கும்
போர்வை
சில வேளைகளில்
என்னை மூச்சு முட்ட
வைக்கும்
வைத்து தூக்கம்
தொலைக்கும்
தூர விலக்கி வைத்துத்
தூங்க முயற்சிக்கும்
போது
தூங்காத இருளோடு
பயமுறுத்தும்
முரட்டுப் போர்வையாய்
இந்தப் போர்வையே
இல்லாமல்
தூங்கியதுண்டு
இமைகளோடு
முரண்டு பிடித்து
ஆனால்
அப்போதெல்லாம்
நான் உணராமலில்லை
அந்தக்கம்பளியின்
கத கதப்பை..