இன்று முதல் தோசைக்கு சீனி இல்லை

ஒரு ஓட்டலில் வழக்கமாக ஒருவர் சாப்பிட்டு வந்தார். அவர் தோசைக்கு சீனி வைத்து சாப்பிடுவார். சீனி விலை ஏற்றம் காரணமாக ஓட்டல்காரர் தோசைக்கு சீனி கொடுப்பதில்லை என்று தீர்மானித்தார்.

அதை சாப்பிடுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக‘இன்றுமுதல் தோசைக்கு சீனி இல்லை’ என்று எழுதி வைத்தார்.

வழக்கமாக சாப்பிட வந்தவர், ஒரு தோசையை சாப்பிட்டுவிட்டு, கொஞ்ச நேரத்தில் ‘சீனி கொண்டு வாங்க’ என்றார். உடனே ஓட்டல்காரர் , ‘அதான் பலகையில் எழுதிப் போட்டிருக்கே. படிக்க தெரியலையா? படிக்கலையா?’ என்றார். அதற்கு சாப்பிட வந்தவர், ‘இது இரண்டாவது தோசை. இதுக்கு சீனி இல்லைன்னு எழுதி வைக்கலையே! கொண்டு வாங்க சீனியை’ என்றார்.

அவர் வாசித்தது ‘ இன்று, முதல் தோசைக்கு சீனி இல்லை’என்பதாகும்.

அடுத்த நாள்-

இனிமேல் தோசைக்கு சீனி இல்லை என்று போர்டு எழுதி வைத்தார் ஓட்டல்காரர்.

சாப்பிட வந்தவர். போர்டை படித்தார். சாப்பிட அமர்ந்தார். கொஞ்ச நேரத்தில் ‘தோசைக்கு சீனி கொண்டு வாங்க’ என்றார்.

‘அதான் இனிமேல் தோசைக்கு சீனி இல்லைன்னு எழுதியிருக்கே’ என்றார்.

‘இனி, மேல் தோசைக்குத்தான் சீனி இல்லைன்னு எழுதியிருக்கு. கீழ் தோசைக்கு சீனி கொண்டு வாங்க’ என்றார்.

ஓட்டல்காரர் திகைத்தார்.

மறுநாள்- தோசைக்கு சீனி இல்லை என்று எழுதி வைத்தார்.

வழக்கமாக சாப்பிட வருபவர் வேறு ஓட்டலுக்குச் சாப்பிட சென்று விட்டார்.



*வரவேற்கிறது- வர வேர்க்கிறது



மிக தொலைவில் இருந்து ஒரு பேச்சாளரை பேசுவதற்கு அழைத்திருந்தனர்.

ஊரின் நுழைவு இடத்தில் ‘திருச்சி வரவேற்கிறது’ என்று வைக்க வேண்டிய விளம்பர பலகையில் ‘திருச்சி வர வேற்கிறது’என்று எழுதி விட்டார்களாம். அதனை வாசித்த பேச்சாளர், ‘திருச்சி வர, வேர்க்கும்தான்‘ என்றாராம்.

*சீனி தின்றால்...



நண்பன் ஒருவன் ‘சீனி தின்றால் இனிக்கும்‘ என்று எழுதினான். உடனே குறும்புகார நண்பன் ஒருவன்‘அதெப்படி, சீனி தின்ன, றால் இனிக்கும்?’ என்று பிரித்து படித்தான். அவன் அர்த்தம் கொண்டது, சீனி தின், றால் இனிக்கும்.



*******************

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (5-Feb-16, 9:43 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 141

மேலே