காதல் மழையே
கண்ணோரமாய் காதல்
மழைத் தூவினாயடி...
குருதியில் குளறுபடியான இதயம்
தற்போது காதல் மழையில்
நனைந்து கவிபாடுதே ...
ஊல்லூரும் உன் நினைவு
உடம்பெல்லாம் உருண்டு ஓடுதே ...
உயிர்வரை சென்று என்னை
உலகினையே மறந்திடச் செய்யுதே...
விடியல் தினம் தினம் வந்தாலும்
விடியும் முன் வரும் உன் கனவே
என் உலகம் ஆனதடி...
மீண்டும் ஒருமுறை கிடைத்ததடி
கருவறை நிம்மதி உன்மடியில்
தலை சாய்கையில் ...
வெயிலும் சுகமானதடி தலை
போர்த்திட உன் ஆடை இருக்கும் வரை...
உணவு இல்லாதும் வாழ்திடுவேனடி
இனி உன்நினைவு மட்டும்
இல்லாவிடில் இறந்திடுவேனடி .
காதல் மழை தந்தவளே...
கடைசி வரை வருவேனடி
உனக்கு குடையாக...