என் உயிர்க்கலங்கள் நீயோ----

~~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
உடையும் தருணத்தில் உள்ள
அணைக்கட்டில் பெய்யும் கார்கால
மழை போல
நான் எழுதும் வரிகள். ....
தூறலில் நனையும் உனக்கு
புரிவது கடினம் !
உணர்ச்சிகளின் கோர்வைகளாய்
சிந்தனையைச் சிதறும் துளிகளை
துடைத்தெறியலாம் ...
அதற்கும்
வருத்தப் படுவதற்கு என்னுள்
உயிர் தளைத்திருக்குமோ
சந்தேகம் தான். ..
அகாலமாய் மரணமெய்தும்
மௌனங்களால்
வெடித்த அசரீரிகளை
வாசித்து விடு !
மூடி ஒளித்த
என் உயிர்த் திரட்டுக்களை
கௌவிக் கொண்டோடிய
உன் புன்முறுவல்கள்
வாசம் கமழும் மல்லிகைகளாக
இளம் தென்றல் தடவிய
மிதமான மென்மைகளோடு மலரும் !
வெண்மேகங்கள் கலைந்து
கார் புயல்களாக
உன் காதைப் பிளந்தால்
உடனே மூடி விடு
அது வெடிக்காதிருக்கட்டும் !
- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (6-Feb-16, 5:08 am)
சேர்த்தது : தமிழ் உதயா
பார்வை : 91

மேலே