சாரல் 4
சாரல் 4
*காதல் சின்னமாம் தாஜ்மஹால்
கொண்டாடப் படுவதோ
அதைக் கட்டியவனின் உழைப்பு
*இருப்பவர்களின் நடுவே
இல்லாதவனின் வாழ்க்கை
-நரகம் (நகரம்)
*விதிவரைந்த ஓவியம்
வீதியில் கிடக்கிறது
-பெண்சிசு
*குப்பைத்தொட்டி பெற்ற பிள்ளை
பிரித்து வைத்து பெயரிடப்படுகிறது
-அனாதை
*குப்பை எது ?
குழந்தைக்கு குழப்பம்
பெற்றதா? பெயரிட்டதா?
-மூர்த்தி