இடைவேளை
இடைவெளிகள் பற்றிய
அக்கறை இல்லாத
அமர்வுகளின் முடிவுக்குள்
ஆரம்பிக்கும்
கரைகளின் இருபுறம் தாண்டிய
மறுபுறம் வேண்டிய
விதிகளின் உடைப்பாக,
வியாக்கியானங்களின்
மிதப்பாக,
கல் கொண்டும்
கவிதை வடித்தும்
அடுத்த பக்க முடிவை
அடியோடு கிழித்து
எரித்து சாம்பலாக்கி
அதைப் பூசும்
புது எழுத்துக்களின்
நவீனத்துவ முயக்க
நிலை போலவே,
காலம் நிறுத்தும்
ஓவியத்துள்
தவறி விழுந்த பிறகும்
எழ மறக்கும்
தூரிகையின் பெரும்
மௌனமென
மீண்டும் விரியும்
இடைவேளை பற்றி
அக்கறை இப்போதும்
இல்லை- எப்போதும்
இல்லவே இல்லை...
கருந்திரள் கொண்ட
கர்ப்ப வெளிக்குள்
கருப் பொருள்
விதைக்க,
திரும்புவதற்குள்
விழுந்த நட்சத்திரமாகவே
இருந்து விட்டு போகட்டும்
அற்ற இடைவேளை...
கவிஜி