இழப்புகள் தரும் வலி”

அந்தமான் அழகை ரசிக்க
ஆனந்தமாய் நானும் சென்றேன் !
இயற்கையின் வாசத்திலே
இதயமும் நனைந்திடவே !

சென்று வரலாம்
'செல்லுலார் செல்' எனும்போது;
கூட்டத்தோடு நானும் சென்றேன்
குதூகலமா !

கண்டுவிட்டேன் செல்லுலாறை ;
நின்றுவிட்டேன் கண்கலங்கி !
மரண ஓலம் நெஞ்சை உலுக்க ;
மகத்தான தலைவரெல்லாம்;
கண்முன்னே கலங்கலாக !

கொட்டடி சிறை கூட;
கொட்டுதடா கோபக்கனையை !

விடுதலை ஒன்றை மட்டும்
விரும்பி ஏற்றதனால் !
உணவு, உடை,உறவு மறந்து ;
வாழ்ந்ததெல்லாம்
வாசமில்லா சிறைதனிலே !

இந்தியாவின் விடுதலைக்கு ;
இழந்த உயிர்கள் ஏராளம் !
இழப்புகள் தந்த வலியும் ;
இதயத்திலே ஈட்டியாக !

நித்தம் நித்தம் கலங்குகிறேன் !
நித்திரையும் தொலைக்கின்றேன் !
இழந்ததெல்லாம் என் சொந்தம் !
இயல்புக்கும் வரவில்லை !

எழுதியவர் : hajamohinudeen (7-Feb-16, 5:33 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 110

மேலே