மாலை மயக்கம்

மாலை நேரமது மலர் மாலையிட,
மன்னவன் நினைவுகள் நெஞ்சை துளைக்க,
மயக்கம் கொண்டேன்,
மாலை சூடும் நாள் எண்ணி,
மாலை வேளையிலே,
மிதந்திடும் கனவுகள்,
மனதை கொள்ளையிட,
மெல்லிய குரலிசையோடிய பாடல்,
மங்கை நெஞ்சினிலே,
மிதமாக மிதக்க,
மின்னிடும் கண்களும்,
மறையும் சூரியனை காண,
மன்றத்திலே கைக்கோர்க்கும்,
மணமேடையது வானில் தெரிய - பறித்த
மலரினை கண்டு சிரித்து,
மார்போடு அனைத்து,
மான்விழியோரம் கண்டால் தெரியும்,
மயக்கத்தின் நாயகன் யார் என்று ?

மயக்கத்தின் கிறக்கம் .....

எழுதியவர் : ச.அருள் (7-Feb-16, 6:34 pm)
Tanglish : maalai mayakkam
பார்வை : 449

மேலே