என்னவனே காதல் இனிது

வயலினை வாசிக்கும் வல்லவனே பாராய்
கயல்விழி யாளெந்தன் கண்ணை - நயமாய்க்
கவிதையும் பேசிடும் காதலுஞ் சொல்லும்
தவித்திடு முள்ளம் தனித்து .
காக்கை குருவியுமுன் கானத்தில் மெய்மறக்க
ஏக்கம் பெருகிடுதே என்னுள்ளே - பூக்களும்
புன்னகைத்து வாழ்த்திட பூரிப்பால் பொங்கிடுதே
என்னவனே காதல் இனிது .