என்னுள் வேதனை

இந்த நொடி நான் சுகம் தான்...
என்னுள்ளே எண்ணற்ற வேதனைகள்...
எவரும் அறிந்திட வாய்ப்பில்லை...
பத்து மாதம் சுமந்த என் அன்னை..
உதடசைத்து, முகம் பார்க்கும் முன்..
அயல் நாடு சென்றாயே நீ...
பாவை என் பாதம்...
எவருக்கும் பாரமாய் இருந்திடாமல்..
நான் என்றும் சிரித்திட...
உன்னில் கண்ணீரை வைத்து...
என்னை பாட்டியிடம் விட்டுச்சென்றாயே...
என் பார்வை தெரியும் முன்...
என்னருகில் நீயில்லை...
பாசம் எதுவென்று...
நான் அறிந்திடவில்லை...
இரண்டாண்டு ஒரு முறை...
எனை பார்த்திட நீ வருவதும்..
வந்த சில நாளிலும்...
ஆண்டாண்டு பாசத்தையும்...
அணுவணுவாய் நீ தந்த ரகசியம்..
ஏனென்று பின்பு புரிந்தேனே..
அணுவணுவாய் தந்த அன்பு...
அன்னை உனை மறுபடியும் பார்த்திட வரை தானோ..
பாதையறிந்து நான் செல்லும் முன்.
பாவையென்னில் எத்தனை வலிகள் தான்...
என்னாசையெல்லாமே...
எதுவுமிங்கே நடக்கவில்லை..
பாவையாய் நான் பிறந்ததாலோ..
பாரமாய் உன்னில் விழுந்தேனோ...
பாசத்திற்கு நானும் துடித்தேனே நித்தமும்...
தலைவாரிட உன் கைகள் இல்லை..
என் தாயே...
என் தலையெழுத்தின் தண்டனையாய்...
தவிக்கிறேன் தினமும்...
உந்தன் முகசிரிப்பை தினம் ரசித்ததில்லை...
சுடுசொல்லும் வாங்கியதில்லை...
என் தாயே..
நீ என்னோடும் என்னருகில் இல்லை..
சுற்றமுமிங்கே...
தாயில்லா என்னை...
தரம் தாழ்த்தி வசைப்பாடிய...
வேதனையின் வலியென்ன சொல்ல...
அந்த நொடியெல்லாம்...
என் கண்ணீரை துடைத்திட நீயில்லை...
என் தலை சாய்த்திட உன் மடியுமில்லை. ...
சுற்றியும் வேதனைதான்...
அன்னை நீ பார்த்திட...
என் பள்ளியாசிரியர்கள் அன்னையாய் மாறிட...
வேதனை தந்த வலியெல்லாம்..
என் சாதனைக்கு வழியாய் மாற்றிவிட்டேன்...
இன்றும் நான் ஏங்குகிறேன்...
என் தாயே...
உன் பாசத்திற்கு...
அணு நொடியும் உன்னை பிரிந்திடாமல் நானிருக்க வேண்டுகிறேன்...

எழுதியவர் : (8-Feb-16, 10:11 am)
Tanglish : ennul vethanai
பார்வை : 77

மேலே