நீயாகிட
மெழுகுவர்த்தியாய் மாறி
நினக்காய் உருகிட ஆசைக் கொண்டேன்...
எனை உருக்கி
உனை சேர்ந்திட ஆசைக் கொண்டேன்...
உன்னில் கரைந்து
நான் நீயாய் மாறிட ஆசைக் கொண்டேன்...
என் அடையாளங்கள் தொலைத்து
விருப்பு வெறுப்பு மறந்து
உலகம் துறந்து
காலம் கடந்து
வாழ்வென்பது நீயென்றாகிட ஆசைக் கொண்டேனே...