திருப்பூவணம் பதிகம் 4

"வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்
பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை
ஈசனை மலர்புனைந் தேத்து வார்வினை
நாசனை யடிதொழ நன்மை யாகுமே" 4

பதவுரை:

வெண்பொடி பூசனை – வெண்மையான திருநீறு பூசியவனை;
வினை – பாவம்,
பாவநாசன் - சிவனுக்கொரு பெயர்.

பொருளுரை:

நறுமணம் கமழும் மலர் மாலைகளை அணிந்துள்ள மார்பில் திருவெண்ணீறு பூசியவனை, சோலைகளையுடைய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவனை, மலர்தூவி, பூசனை செய்து புகழும் அன்பர்களின் பாவங்களை நாசம் செய்பவனாகிய சிவபெருமானை, அவன் திருவடிகளைத் தொழும் அன்பர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Feb-16, 10:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

சிறந்த கட்டுரைகள்

மேலே