தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து16---ப்ரியா

வசந்தை பழிவாங்குவதற்கு விஜயின் உதவி நமக்கு வேண்டாம் என வந்தனா சொல்ல......வந்தனா சொல்வதும் நியாயம்தான் ஆண்களை இதில் இழுத்தால் இன்னும் பிரச்சனை அதிகம்தான் ஆகும் அதனால முடிஞ்ச வரைக்கும் நாம ட்ரை பண்ணுவோம் முடியவில்லை என்றால் விஜய் பார்த்துக்கட்டும் என்ற முடிவுடன் தனது எண்ணத்தை வந்தனாவிடம் சொன்னாள் ரியா......!

வந்தனாவிற்கு தலைகால் புரியவில்லை இப்போதான் நான் சந்தோஷமாக இருக்கேன்டி உனக்கு எந்த பிரச்சனையும் வராதபடி பார்த்துக்கொள் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.....

அவள் சென்றதும் வந்தனாவிற்குள் பல யோசனைகள் கீதுவிடம் போட்டோ எப்படி போச்சிதுன்னு தெரிலயே? நாம வேற அவன் போட்டோ எதுவும் இல்லன்னு சொல்லிருக்கோம் இப்போ அவ என்ன நினைக்கப்போறாளோ?சீக்கிரம் இந்த விஷயத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்...........என்றவள் கீதுவின் ஊருக்கு செல்வதற்காக ரெடி ஆகிக்கொண்டிருந்தாள்.....!

கம்பெனிக்கு சென்ற ரியாவைப்பார்த்ததும் என்ன இவ்ளோ சீக்கிரமா வந்துட்டீங்க ரெஸ்ட் எடுத்துட்டு லேட்டாதானே வர சொன்னேன் என்று அக்கறையுடன் கேட்டான் வசந்த்.....

இல்ல அது வந்து...இன்னிக்கு நைட் என் தோழியோட ஊருக்கு செல்கிறேன் அதற்குள் இங்குள்ள வேலைகளை முடித்து தருகிறேன் என்று ரியா சொல்ல.......வசந்துக்கு எரிச்சலாய் வந்தது.

எதுக்கு இப்போ உடனே கிளம்புறீங்க?என்றான் வசந்த்..?

என் தோழிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது நிச்சயதார்த்தமும் கோயில் திருவிழாவும் வருகிறது அதனால்தான் என்று மெல்ல பதிலளித்தாள்...!

மன அமைதியடைந்தவனாய் சரி சீக்கிரம்......வெளிநாட்டுக்கு அனுப்பி கொடுக்க வேண்டிய குறிப்புகள் எல்லாம் இதிலிருக்கின்றன..டைப் பண்ணி save பண்ணி வைங்க அப்புறம் பென்டிரைவ்ல ஒன்னு copy பண்ணிதாங்க அப்புறம் எல்லாம் ஓகேனா ப்ரிண்டும் எடுத்து வைங்க.......ஏதாவது டவுட் இருந்திச்சின்னா கேளுங்க முடிச்சிட்டு கிளம்புங்க என்று தன் கையிலிருந்த பேப்பர்களை எடுத்துக்கொடுத்தான் 13பேப்பர்கள் இருந்தன அது அவளுக்கு கஷ்டமானாதாக தெரியவில்லை மணி இப்போது 11.30 தான் ஆகுது எப்படியும் 1.30 க்குள்ளால முடிச்சிடலாம் என்ற நம்பிக்கையுடன் தன் பணியை தொடங்கினாள் அவனும் அதில் உட்கார்ந்திருந்தான்....!

கண்டிப்பா போகணுமா? என்று அவன் கைவிரலால் டைப் செய்து கொண்டிருக்கும் அவளது விரலில் கோடுபோட்டு கேட்டுக்கொண்டிருந்தான்......அவனது செய்கை இவளை எரிச்சலடைய செய்தது......சார் எனக்கு கொஞ்சம் சீக்கிரமா போகணும் ப்ளீஸ் வொர்க் பண்ண விடுங்க என்று கெஞ்சினபடி எரிச்சலாய் பேசினாள் அவளது சூழ்நிலையை புரிந்து கொண்டவன் ஸாரி உங்க வேலைய தொடருங்கள் எனக்கு கொஞ்சம் வெளி வேலை இருக்குது பார்த்துட்டு வாரேன் ஏதாவது சந்தேகம் என்றால் கால்பண்ணி கேளுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

அவன் அந்த இடத்தில் இல்லாதது அவளுக்கு நல்லதாக அமைந்தது.....கொஞ்சம் கொஞ்சமாக குடுக்கிற ஒவ்வொரு குறிப்புகளையும் வந்தனாவுக்கு மெயில் பண்ணிவிட்டாள் அதுமட்டுமில்லாமல் ஜெராக்சும் எடுத்துக்கொண்டாள்...... கைகள் அளவுக்கு அதிகமாக உதறிகொண்டிருந்தன அவளால் அதை கட்டுப்படுத்தமுடியவில்லை எப்படியோ எல்லாவற்றையும் முடித்து சரியாக 2மணிக்கு அவனுக்கு கால்பண்ணினாள்....!

20 நிமிடங்களில் அவனும் வந்து சேர்ந்தான்,எல்லாவற்றையும் அவன் கையில் கொடுத்தாள் பிரிண்ட் எடுத்த பேப்பர்களில் கையெழுத்தும் வாங்கி அவனுடைய டேபிளில் வைத்து தனக்கு விடுப்பு வேண்டி ஒரு கடிதமும் எழுதி இவள் கையொப்பம் போட்டு அவனிடம் கொடுத்தாள்.

லீவுலெட்டரை வாங்கி டிராயரில் வைத்தான்..........மற்ற பேப்பர்ஸ் எல்லாம் செக் பண்ணி விட்டு ரொம்ப நன்றி சீக்கிரமா முடிச்சிட்டீங்க இப்பவே ஹெட் ஆபிஸ்க்கு அனுப்பி வைக்கிறேன் யார் மேலயும் நம்பிக்கை இல்லை நான் இல்லனா நீங்கதான் இதுக்கு பொறுப்பா இருக்கணும்.........இதுல இருக்கிறது கோடிக்கணக்கான பணம் மட்டுமில்ல என்னோட மானம் மரியாதை புகழ் இலட்சியம் எல்லாமே இதுதான் என்று அந்த பேப்பர்ஸை காட்டி சிரித்துக்கொண்டான்.

தவறு செய்து விட்டு அதில் நிற்பதற்கு அவளுடைய உடம்பு கூசியது.........சார் நான் கிளம்பட்டுமா?என்று கேட்டாள் ரியா?

சரிமா! நீங்க வந்த பிறகுதான் இனி அந்த computera ஓபன் பண்ணணும் வேற யாராவது filesa பார்க்க சான்ஸ் இருக்குது அதனால நம்ம ரெண்டு பேரோட பேரையும் மிக்ஸ் பண்ணி password கொடுங்க என்றான்......!

சரி என்றவளின் கைகள் தாளம் போட்டன ஏன் கை நடுங்குது என்று கேட்டான்,ஒன்றுமில்ல சார் என்று நிதானமாய் பதிலளித்து எப்படியோ நடுக்கத்தைப்போக்கினாள்.....!

அவளது கன்னத்தை பிடித்து நெற்றியில் முத்தமிட்டு கவனமாய் போயிட்டு வா உனக்காக நான் காத்துட்டிருக்கேன் என்று அவளை அனுப்பி வைத்தான்......அவளது நடுக்கம் இப்பொழுது பன்மடங்கானது??

ரியாவின் வரவை எதிபார்த்திருந்த வந்தனா அவள் வந்ததும் ரொம்ப நன்றிடி எனக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு எவ்ளோ பெரிய காரியம் பண்ணிருக்க நான் உன்ன என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று சந்தோஷமாய் கண்ணீருடன் அவளைக்கட்டிக்கொண்டாள்.

மிகவும் கவலையாக இருந்தாள் ரியா அவள் மனதிற்குள் பல விஷயங்கள் மோதிக்கொண்டிருந்தன, தனது ஹேன்ட்பேக்கிலிருந்து அவனது கையெழுத்து வாங்கிய பேப்பரையும் அவளிடம் கொடுத்தாள்....இதுவும் வாங்கிட்டியா என்னால நம்பவே முடில செல்லம் என்று மறுபடியும் தன் சந்தோஷத்தை காட்டிக்கொள்ளும் விதத்தில் அவளை முத்தமிட்டு அணைத்துக்கொண்டாள்......

இது எப்டி என்று புரியாமல் கேட்டாள் வந்தனா....??அவனிடமிருந்து மற்ற பேப்பர்களில் கையெழுத்து வாங்கும் போது இடையில் வைத்து இதுலயும் வாங்கிவிட்டேன் என்று சோர்வாய் பதிலளித்தாள்....கீது இன்னும் வரலியா என்று கேட்டுக்கொண்டே சாப்பிட சென்றாள் ரியா......

அதற்குள் வந்தனா யாருக்கோ கால்பண்ணி அழைத்தாள்??????

ஹோட்டலில் இருந்து சாப்பிட்டுவிட்டு விஜய் மற்றும் கீது வெளியே வரும் போது விஜயின் பழைய நண்பன் மற்றும் அவனின் நண்பனாகிய வசந்தும் உள்ளே சென்று கொண்டிருந்தனர்..... விஜயைப்பார்த்ததும் அவன் அழைத்துப்பேசினான், ஹாய் எப்டிடா இருக்கா?கூட அழகான பெண் இருந்தால் கண்ணு தெரியாதோ? என்று கிண்டலடித்தான்......ஹே, இது என் வருங்கால மனைவி என்று கீதுவை கைக்காட்டினான்..........பதிலுக்கு அவனும் இது என் நண்பன் வசந்த் என்று அறிமுகப்படுத்தினான் பெயரளவில் வசந்த்க்கும் கைக்கொடுத்து விட்டு கிளம்பினர் இருவரும்......

என் நண்பனோட பக்கத்துல நின்னவன் யாரு தெரியுமா என்று கீதுவிடம் கேட்டான் விஜய்?

தெரியாதுங்க யாரு நான் இதுவரைக்கும் பார்த்தது இல்ல என்றாள்......

இதான் வந்தனாவோட காதலனின் நண்பன் வசந்த் என்றான்...!

எதுவும் புரியாமல் விழித்தாள் கீது என்ன சொல்றிங்க நீங்க?

என்னங்க சொல்றீங்க வசந்த் என்பவன்தான் வந்தனாவின் காதலன் என்றாள்........இல்லடி அந்த பிரதீக் தான் வந்தனாவின் காதலன் பிரதீக்க எனக்கு தெரியாதா? போட்டோவுல இருக்கிற பிரதீக்க எனக்கு தெரியாதா??என்று கீதுவிடம் கோவப்பட்டான் விஜய்...?

சரி சரி வீட்டுல போய் எல்லாம் பேசிப்போம் வாங்க என்று அழைத்தாள்.....இருவரும் குழப்பத்தோடு வீட்டிற்கு சென்றனர்.......??..


தொடரும்........!!

எழுதியவர் : ப்ரியா (10-Feb-16, 10:58 am)
பார்வை : 415

மேலே