நல்லதே பாரு அஷ்வின்
நல்லதே பாரு அஷ்வின்.....!.
-----------------------------------------
"சொல்லு அஷ்வின்! நீ எப்போ வெளியே போகணும்? டைம் இருந்தால் என்னை கோயிலுக்கு கூட்டிண்டு போகரியா? " அன்று சனிக்கிழமை ... அம்மாவிற்கு அரை வேலைதான் அலுவலகம்... வீட்டில் இருந்தாள்...
" என்னமா என்னை தொந்தரவு செய்யறே? நான் கிபோர்ட் கிளாஸ் போகணும் உனக்கு தெரியாதா? இந்த லேடீஸ் எப்ப பார்த்தாலும் தொந்தரவு... ஒரு ஸ்கூட்டி வங்கிக்கோன்னு சொன்ன கேட்கறியா? " சற்று எரிச்சலோடு சொன்னான் அஷ்வின். இவன் ஒரே மகன்... ரொம்ப சுட்டி ... கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.... அம்மா மீது கொள்ளை ஆசை.... ஆனால் தன வேலை கெடும் எனின் கொஞ்சம் கோபம் வரும்....
"எதுக்கு இப்போ பெண்களை இழுக்கறே? " அம்மா கேட்டாள்.... " உம! உனக்கு உடனே கோபம் வந்திடுமே! எனக்கு இந்த லேடீஸ் கண்டாலே பிடிப்பதில்லை... ரொம்ப மோசம்... ஒருத்தரும் சரி இல்லை...." ஏதோ சொல்லிக்கொண்டே போனான் அஷ்வின்... அம்மாவிற்கு ஆத்திரம் வந்தது... விடுவாளா? " ஏய்! என்னடா சும்மா பெண்களை குறை சொல்லிண்டிருக்கே? மரியாதையாக பேசு...
எல்லோரையும் தப்பாக பேசாதே... ஏதோ படத்திலே பெண்களை தப்பாக காண்பித்தாலோ, டி.வி. சீரியல்களில் மோசமானவர்களாக கான்பிப்பதாலோ நீ இப்படி பேசக்கூடாது.... அது ரொம்ப தப்பு...அஷ்வின்... " அம்மா தாளாமல் சொன்னாள்..
" சும்மா உங்க வர்கத்துக்கு சப்போர்ட் பண்ணாதேமா! " உனக்கு என்ன தெரியும்? " அஷ்வின் கூற அம்மா - " என்னடா நீ என்னமோ 50 வருஷம் வாழ்ந்தவன் போல பேசறே..... இன்னும் கால் பாகம் கூட வாழ்க்கையை தாண்டலே.... அதற்குள்ளே நீ பேச ஆரம்பிச்சுட்டே... முதல்ல பெண்களை மதிக்க கத்துக்கோ.... உன் இஷ்டப்படி பேசக்கூடாது.... நானும் ஒரு பெண்தான்... அப்ப நானும் மோசமா? " அம்மா கேட்டது அவனுக்கு சுர் அன்றது....
" உன்னை ஒன்னும் நான் சொல்லலே... உன்னை பற்றி எனக்கு தெரியும்.... இப்போ இருக்கிற ஜெநேரஷன் பெண்களை பாரு... டிரஸ் சரி இல்லை... நடை சரி இல்லை... பிடிக்கறதே இல்லை... அப்புறம் எங்களை மட்டும் எப்போதும் குறை சொல்றது... இது சரியாமா? " ஆத்திரமாக பேசினான் அஷ்வின்...
"அட அஷ்வின்.. யாரோ ஒருத்தர், இரண்டு பேர் அப்படி இருக்கறதாலே மொத்தமா எல்லாரையும் குறை சொல்லக்கூடாது... ஒரு வெறுப்பை மனசிலே வெச்சுக்காதே... அது நல்லதில்லை... இன்னும் நிறைய வாழனும் நீ கண்ணா.... வாழ்கையை ரசிக்க கத்துக்கோ. அப்போ நீயே நல்லவர் யாரு, கெட்டவர் யாரு என்கிற முடிவுக்கு வருவே..." அம்மா கூறி முடித்ததும்.... " சரி ! சரி! சீக்கிரம் கிளம்பு உன்னை கோயில்கு கூட்டி போய்ட்டு நான் கிளாஸ் போகணும்... வா! டைம் ஆறது " பேச்சை மாற்றினான் அஷ்வின்...
ஒரு வாரம் கழித்து ஒரு நாள்...
அப்பா , அம்மா இருவருடன் மால் ஒன்றிற்கு சென்றிருந்தான் அஷ்வின்...
கல்லூரி மாணவிகள் கூட்டம் ஒன்று.... அதில் ஒன்று அல்லது இரண்டு பேர்கள் மட்டும் சற்று பண்பில்லா ஆடையில் வந்திருந்தனர்... மேலும் ஒரே சப்தம், ஆட்டம் , பாட்டம்... அம்மா மனதில் நினைத்துக்கொண்டாள் " போச்சுடா! இவன் ஆரம்பித்து விடுவான்... பட்டிமன்றம் ஆரம்பம் ஆகுமே.... அப்பாடா.. இவனை எப்படி சமாளிக்கப்போரோமோ? "
5 நிமிடங்கள் கழிந்தது.... " அம்மா! பார்த்தியா? பாரு நல்லா! நான் சொன்னால் உனக்கு கோபம் வரும்... அங்கே என்ன கூத்து நடக்கிறது? ஒருத்தர் மீது ஒருத்தர் விழுந்து ... எல்லாமே பெண்கள்தான்... இருந்தாலும் இது வீடு இல்லைமா! ஒரு பப்ளிக் இடம்... இங்கே கொஞ்சம் வரைமுறை தேவை இல்லையா? நான் எதிர் பார்கிறேன்... " மூச்சு விடாமல் சொன்னான் அஷ்வின்... அப்பா பக்கத்தில் இருந்தார்.... " அடேய்! உன் வேலையை பாருடா... நீ ஒழுங்க இருக்கியா? அது போதும்... நம்ம வந்த வேலை என்ன? என்ஜாய் பண்ண... பண்ணிட்டு கொஞ்சம் சாப்பிட்டு போவோம்... அவ்வளவுதான்.... " அழுத்தமாய் சொன்னார் அப்பா...
அவன் சமாதானம் ஆகவில்லை.... அம்மா மெல்லிய குரலில் " அஷ்வின் ! நீ இந்தகாலத்துப் பிள்ளை.. உன் உணர்வுகளை நான் மதிக்கிறேன்... அந்தக்கூட்டத்தில் ஒன்று அல்லது இரண்டு பேர் தவிர மற்ற அத்தனை பேருமே ரொம்பவும் பண்போடு ஆடை போட்டிருக்கா... சத்தம் போடறதோ , சிரிக்கறதோ ஒன்றும் தப்பில்லை.... போகப் போக அது குறைந்து விடும்.... அந்த இரண்டு பேரை நாம் விட்டுவிடுவோம்.... அதை பற்றிய கவலை நமக்கில்லை அவர்கள் பெற்றோருக்கு... நீ பெண்களை பற்றிய தவறான கருத்துக்களை உன் மனசிலேர்ந்து எடுத்திடு.... உன் பார்வையை மாற்று... நன்றாய் இருப்பவர் மீது உன் கவனத்தை செலுத்து... நல்ல மாற்றத்தை காண்பாய்... இப்போ என்ஜாய் பண்ணு... "
கொஞ்சம் தெளிவானான் அஷ்வின்...
இரண்டு, மூன்று தடவை அம்மா சொன்னதை யோசித்தான்.. "அவள் கூறியதிலும் உன்னை இருக்கிறது....யாரோ ஒருத்தர் தப்பா இருக்கறதாலே நாமே மொத்த போரையும் தப்பாய் நினைக்கறதோ, வெறுக்கறதோ தவறு .... என் எண்ணத்தை மாத்தணும்.... அம்மா சொன்ன மாதிரி நல்லதையே பாப்போம், நல்ல விஷயங்களைக் கேட்போம் ... அவ்வளவுதான்...." மனதில் இதுவரை இருந்த பாரம் குறைந்தது போல் தோன்றியது அஷ்வினிற்கு...
அவனை ஓரமாய் நின்று பார்த்த அம்மாவிற்கு உயிர் வந்தாற்போல் இருந்தது....
அவன் மனசு அவள் அறிய மாட்டாளா?
மைதிலி ராம்ஜி