மழை மகனே வருக

மழை மகனே வருக, வருக!

எங் கூட யாரும் வரல. எம் பின்னாடியும் யாரும் வரல. யாருக்குடா மழை மகனே வருகன்னு வரவேற்பு குடுக்கற?

உனக்குத் தாண்டா மழை மகனே.

எனக்கு யாருடா மழை மகன் -னு பேரு வச்சது?

உன்னோட அம்மாவும் அப்பாவுந் தான்.

இல்லையே. எனக்கு வருண் குமார் -ன்னு தானே எனக்குப் பேரு வச்சாங்க.
உனக்கு எப்ப வருண் குமார் -ன்னு பேரு வச்சாங்களோ அப்பவே நீ மழை மகன் ஆகிட்டடா.

என்னடா கொழப்பற?

அடே மழை மகனே, வருண் -னா மழை, தண்ணீர் போன்ற அர்த்தங்கள் இருக்குது. மழைக்கான கடவுள வருண பகவான்னு சொல்லறோம். குமார் - ன்னா பையன், மகன், மணமாகாத,, கற்பு நெறி தவறாத-ன்னு பல அர்த்தங்கள் இருக்குது.

அட எம் பேரு சமஸ்கிருதப் பேருன்னு தெரியும். ஆனா எம் பேருக்கு இவ்வளவு அர்த்தங்கள் இருக்கும்னு தெரியாதடா நண்பா. ரொம்ப நன்றிடா.

@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல.. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.

எழுதியவர் : மலர் (11-Feb-16, 8:17 pm)
பார்வை : 205

மேலே