பார்த்து நட பெண்ணே
பார்த்து நட பெண்ணே...!
படம் பார்த்து கவிதை...!
======================
பாவி பசங்க மனச கெடுக்க
பாதி இடுப்பு மறைக்காமத்தான்
பச்ச புள்ள பச்சையுடுத்தி
பவனிதான் வருகிறாளே..!!
முக்காடு போட்டு வந்ததாலும்
விலக்கி பாக்கும் ஆம்பள பார்வ
உடம்பு காட்டி நீயும் வந்தா
உரசாதோ தெரிஞ்சுக்க புள்ள..!
பத்திக்காதோ பயலுக மனசு
கொத்திக்கிட்டு போகும் வயசு
கணவன்தான் ரசிக்க வேனும்
கண்டவங்க ரசிக்கலாமோ..?
வீட்டுக்குள்ளே இருக்கையிலே
அரைகுறையா இருந்துக்க பொண்ணு
வீடு தாண்டி வெளியே வந்தா
வலை வீசும் ஆபத்து நின்னு..!!

