இருள்

இன்று வரும் நாளை வருமென்றுக்
காத்திருந்து மனம் விட்டுப் போய்
வராமலே போய் விடுமோ என்ற ஐயம்
இண்டு இடுக்குகளில் சப்தமின்றி வேர் விட்டு
மெல்ல ஆக்கிரமிக்கத் துவங்கும்...
இருள் விரட்டி ஒளி பெருக்க
இறுதி மூச்சு வரை போராடி தோற்கும் நொடி
அணையும் விளக்கு ஒளி கூட்டி மறையும்...

எழுதியவர் : பிரத்யுக்ஷா பிரஜோத் (12-Feb-16, 1:37 pm)
Tanglish : irul
பார்வை : 99

மேலே