எதிர்பார்ப்பு

வீட்டினில் சமைந்தபடி பெண்
ஒருத்தி நிற்கின்றாள்! - அவள்
வருங்கால கணவனை விழியில்
ஒட்டி வரைகின்றாள்!

பாவையவள் காதலை துளி
அளவும் விரும்பவில்லை! - அவள்
பஞ்சணையில் வீழ்ந்தாலும் கனவில்
கணவன் தொல்லை!

எண்ணி எண்ணி சிணுங்குகிறாள்
வருகின்ற கணவனால் - அவன்
எந்தபடி இருந்தாலும் ஏற்பாளாம்
அன்னவரின் நேசத்தால்!

சிந்துகின்ற பொன் சிரிப்பை நாளும்
அவன்தர வேண்டும் - நான்
சண்டையோடு நின்றாலும் என்னை
அலுங்காமல் அணைக்கனும்!

தவறு நான் செய்திருந்தால்
தண்டித்தே திருத்தனும் - அவன்
தவறு செய்யவிடாமல் எனக்கு
தந்தைபோல் இருக்கனும்!

மயக்கம் எனக்கு வந்திருந்தால்
மடியிலவன் தாங்கியே - எனக்கு
மாதபோல இருந்து அவன்
மயக்கம்போக வைக்கனும்!

செல்ல செல்ல குறும்புகளை
என்னைபோல் செய்திடவே - என்
அங்கம் எல்லாம் தொட்டணைத்து
அடிக்கடி அவன் பழகனும்!

மெல்ல மெல்ல காலங்கள்
கடக்கின்ற நொடிகளிலே - எனக்கு
முன் இறந்திடமால் வாழவேண்டும்
என் தவங்களிலே!

ஊற்றி வைத்த கற்பனையை
தினுமுமவள் எண்ணி - இவ்வாறு
மாறிமாறி சிணுங்குகிறாள்
மெதுமெதுவாய் புலம்பி!

காமம் கண்ட காதலுக்கு
இந்த சுகம் தெரியாதாம் -சொல்லுகிறாள்
கல்யாணத்தை எதிர் பார்போருக்கு
இந்த சுகம் அறியுமாம்!

எழுதியவர் : (12-Feb-16, 7:08 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : edhirpaarppu
பார்வை : 61

மேலே