தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்-3

“இதய வாசல் திறந்து வைத்தேன்
எந்தன் தேவி உந்தன் வரவை பாத்தேன்
நீ மெல்ல நடந்து வருகின்றப்போது
பூ வாசம் சுமந்து வருகின்ற மாது”
போர்த் தொடுப்போம் காதல் மீது
பொத்தி வைப்போர் காதலில் ஏது ?”

( இதய வாசல் )

கோடி வீட்டு கோமள வள்ளி
கொலுசு மாட்டி நடப்பதை எண்ணி
கிராங்காத கண்கள் தெருவில் இல்லை
உறங்க மறுக்குதே காதலின் தொல்லை

பட்டு மெத்தை விரித்து வைத்து
பாவை உன்னை அமர வைத்து
பாடம் நடத்த அழைக்கின்றேன்
பாரி ஜாதமே விரைந்து வா…!

( இதய வாசல் )

மணக்கும் மாலை சூடி பார்ப்போம்
மணக்கும் முன்பே பாடி பறப்போம்
கோடான கோடி காதல் ஜோடி
கூடி வாழும் அற்புத உலகில்
நமக்கா இடமில்லை…?
நம்மில் பிரிவில்லை…!
உனக்கேன் மனமில்லை
என்னை மணக்க அன்பு மலரே..!

( இதய வாசல் )

எழுதியவர் : இரா.மணிமாறன் (12-Feb-16, 8:43 pm)
பார்வை : 88

மேலே