பிட்சாவும் அடைதோசையும்

எட்டு அங்குல
விட்டத்தில் பிட்சாவுடன்
பிரெஞ்சு விரல்களும்
சிவப்பு மிளகாய்த் துகள்களும்
செம்பழுப்பு நிற மென்பானமும் பரிமாறி
வெறும் அறுநூற்றுத் தொன்னூற்றொன்பது
ரூபாய் வாங்கிக் கொண்டு
கண்ணாடிக் கதவுகளை
பவ்யமாய் திறந்து கொடுத்த
அந்த பன்னாட்டு சங்கிலித்தொடர் உணவகத்தின்
வாசலில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தது
அந்த நண்பர்கள் குழுமம்..

அவர்களின்
நடுத்தர குடும்ப அன்னைகள்
அடைதோசையும் எலுமிச்சை சாதமும்
வெண்பொங்கலும் பணியாரமும்
வத்தக் குழம்பும் தயாரிக்கும் பணியில்
மும்முரமம் காட்டிக் கொண்டிருந்தனர்..

வந்தவுடன் பசியில்லையென்று
படுத்துக் கொள்ளுவார்கள் தம்மக்கள்
என்று அவர்களுக்குத் தெரிந்தாலும்
இந்தத் தலைமுறை
அவர்களிடமிருந்து
மெல்ல
மெல்ல
நழுவிப்
போய்க்கொண்டிருக்கிறது
என்பதை பாவம் அறிந்திருக்கவில்லை..

# ஜி ராஜன்

எழுதியவர் : ஜி ராஜன் (13-Feb-16, 12:51 pm)
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே