காதலர் தினம்
காதலர் தினம்
காதல் என்றால்
என்னெவென்று
அறியாதிருப்பது
ஒரு பருவம்
காதல் என்றால்
சகலமும் என்று
புரிந்து கொள்வது
ஒரு பருவம்
ஒருதலை காதலில்
வாழ்க்கையை கடப்பர்
ஒன்றும் புரியாமல்
பல பேரும்
உள்ளம் புரிந்து
மனங்கள் அறிந்து
சங்கமிப்பது
ஒரு பருவம்
காதலில் தோற்று
பிரிந்து போனால்
சோகமடைவது
ஒரு பருவம்
காதலில் வென்று
திருமணத்தில் முடிந்தால்
பெருமிதம் கொள்வது
ஒரு பருவம்
இன்றைய உலகில்
வாழ்க்கையில் ஜெயித்து
பின் காதலிப்பது
மிக உத்தமமே
வயது வரம்பு
எதுவுமின்றி
காதல் வருவது
மிக இயல்பே.
காதல் ஜோடிகள்
மகிழ்ச்சியில் மூழ்கி
கொண்டாடுவது
ஒரு தினமே
காதலித்த எல்லா
வயதினரும்
கொண்டாடுவதும்
இத்தினமே
அதையே,
காதலர் தினம்
என்று சொல்லிடுவோம்
அதை என்றும் நாம்
போற்றிடுவோம்