நம்மிணைவே காதலுக்கு சிறப்பு
புவியைப் போர்த்திய இருள் அழுக்கை
மதி வந்தே வெளுத்தெடுக்க
ஏக்கம் நிறைத்த மனஅணையை கண்ணால்
நீயும் உடைத் தெடுக்க
கல்லில் நிறைந்த மண் போல
உன்னில் உறைத்தே னுயிரை
பார்வைக் கதிரால் பூமி மிளிர்ந்து
பகற் பொழுதொளி பாதியாக
நீர் மயங்கி வெண்பனியாகும் உன்னால்
நா னுருகி நீயானேன்
கன்னல் தோட்டம் மாங்கனி கூட்டம்
மாசிக்காற்றும் மங்கைபெயர் பேசும்
கனலுக்குள் மண் போனால் செங்கலே
மதுவுக்கு மறுபெய ருன்கண்களே
கழனிக்கு நீர் பாய்ந்தால் செழிப்பாகும்
நம்மிணைவே காதலுக்கு சிறப்பாகும்..