ஐம்புலன்கள்

காண்கிறேன்;
பூலோகப் பாவையை அல்ல.....
தேவலோக பதுமையை! கோமகளின் புதல்வியை!

கேட்கிறேன்;
வெற்று வாக்கியங்களின் தொடர்களை அல்ல.....
கானகக் குயல்களின் ஓசைகளை!

நுகர்கிறேன்;
அவள் கூந்தலிலுள்ள மல்லிகையின் வாசனையை அல்ல.....
பன்னீர் மழையில் நனைந்த செண்பக தோட்டத்தின் நறுமணத்தை!

பேசுகிறேன்;
நொடியில் விழும் வார்த்தைகளை அல்ல......
அவளை அலங்கரிக்கும் பாமாலைகளை!

உணர்கிறேன்;
மார்களித் திங்கள் குளிர்தென்றலை அல்ல....
அவள் உயிரை தொட்டுத் திரும்பிய சுவாசத்தை!

இறைவா!
என் ஐம்புலன்கள், ஏதும்
என்வசம் இனி இல்லையே...!

எழுதியவர் : குறள் பொழிலன் (14-Feb-16, 12:09 pm)
சேர்த்தது : குறள் பொழிலன்
பார்வை : 265

மேலே