காதலன் ஆத்திச்சூடி
 
 
            	    
                அமுத இதழாளே..!
ஆழ்கரு குழலாளே..!
இரை தேடுதடி இதழும்...
ஈகைக்கும் ஏங்குதடி..!
உயிர் பிழிந்து பருகாதே...
ஊடல் கொண்டு வருத்தாதே...
என்பும் கருகுதடி...
ஏக்கம் உருக்குதடி..!
ஐ திரண்ட கண்மணியே..!
ஒளி கொண்ட மின்மினியே..!
ஓய்க்குதடி நினைவின் பிணியே..!
ஔடதம்.! நீ தேன்கனியே..!
 
                     
	    
                

 
                             
                            