நீ --நான்---நிலா=====

● நீ ...!
●●● நான் ....!
●●●●● நிலா ........!
~~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~
நான்
அந்த வானம்
நீ
இந்த நிலம்
இரு மனமும் சொல்கிறது
இணை பிரிதலேது ?

இந்த நிலா
ஒளி உமிழ்ந்து நிற்கிறது என்மீது
நீ குளிர்மையில் காய்ந்து கொள்ள. ..!

ஒரு கானம் நான்
அதன் இசை நீ
இடையே அசைகிறது நிலா ..!

உயிர் தரும் தேகம் நான்
உருவாகும் உணர்வு நீ
அதன் உயிரோட்டம் நிலா ...!

என் பாதையில்
துணையாக நீ
திசை காட்டும் நிலா. ..!

ஜீவத்துடிப்புடன் நான்
ஜீவாத்மார்த்தமாய் நீ
உணர்ச்சி வெளியீடு
செய்கிறது இந்த நிலா. ..!

முழுமதி உன்
முகமெனப் பாடேன் - நீ
முகவரி தொலைத்த
நிலவென கூறேன்...!

பாக்ஷைகள் நம் தூல நிலையில்
வெறும் சப்தம் - உன்
பார்வைகள் உணர்வலையில்
நிறை அர்த்தம் ....!

என் சாம்ராச்சியத்தின்
சமுத்திரம் முழுதும் ஒளிர்கிறது
நீ வந்து கொண்டிருக்கிறாய் என்று
நிலா மொழிகிறது ...!

போதும் நாம்
காதல் செய்ய
இந்த முழு நிலா
வருவாயா நீ வான் உலா ?

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ்: உதயா (15-Feb-16, 3:43 am)
சேர்த்தது : தமிழ் உதயா
பார்வை : 470

மேலே