தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து18---ப்ரியா
ரியாவின் பூ போன்ற மென்மையான கன்னத்தில் ஓங்கி விழுந்த அறையால் அப்படியே மயங்கி சுருண்டு விழுந்தாள்.....தண்ணீர் தெளித்து எழுப்பிய கீது "ரியா ரியா" என்று அவளது கன்னத்தைத்தட்டினாள்......நடப்பது எதுவும் புரியாமல் சுற்றி பார்வையை செலுத்தினாள்.......!
கசங்கிய துணி, கலைந்த முடி, பொலிவிழந்த கண்களுடன் கோவத்தின் உச்சியில் நின்றிருந்தான் வசந்த்!
எப்படியும் நாம் செய்த தவறு அவனுக்கு தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே என்று மனதிற்குள் நினைத்தவள் அவன் பக்கத்தில் சென்றாள்.
துரோகம் பண்ணிட்டியேடி, கூட இருந்தே குழி தோண்டி வச்சிட்டியே பாவி உனக்கு பணம் வேணும்னா என்கிட்ட கேட்டிருக்கலாமில்ல இவ்ளோ பெரிய துரோகம்...... ச்சே நீயெல்லாம் ஒரு பொண்ணா பச்சத்துரோகி என்று அவன்பாட்டுக்கு வாயில் வந்தபடி அவளை திட்டிக்கொண்டிருந்தான்....!
ஹலோ! கொஞ்சம் டீசென்டா பேசுங்க என்று கீது கோவப்பட்டாள்.
நீங்க யாரும் பேசாதிங்க இதுல சம்மந்தப்பட்டது இவதான்,இவள என்னபண்றேன் பாருங்க என்றவன் தன் கையிலிருந்த துப்பாக்கியால் அவளை சுட முயன்றான்.
இதை சிறிதும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை...... விஜய் அவனது கையிலிருந்த துப்பாக்கியை பிடித்து வாங்கினான்....,?என்ன சார் இப்டி இருக்கீங்க என்ன நடந்துதுன்னு சொல்லுங்க அப்புறம் பார்த்துக்கலாம் என்று ஆசுவாசப்படுத்தினான்.
அதுவரை அமைதியாய் இருந்த ரியா வசந்தை நோக்கி.... "நீதான்டா எல்லாத்துக்கும் காரணம்" என்று கத்தினாள்.
என்னது நானா?உனக்கு பைத்தியமாடி..என்னோட இலட்சியம் அனைத்தையும் வீணடிச்சிட்டியே பாவி என்று சொல்லி மறுபடியும் அவளை அடிக்க முற்பட்டான்....
நீங்க சும்மா இருங்க ரியா என்று சொல்லிவிட்டு நீங்க சொல்லுங்க சார் என்ன நடந்துச்சி என்று கேட்டான் விஜய்..?
என்னோட 7வருட உழைப்பையும் ஒரே நாள்ல புதச்சிட்டா?நல்லவ மாதிரி நடிச்சி ஏமாத்திட்டா? 6மாசமா நான் இரவு பகல் பார்க்காம செய்த ப்ராஜெக்ட் நம்ம நாட்டுல மடுமல்ல வெளிநாட்டுலயும் நம்பர்1 ஆக வந்தது , அதோட குறிப்புகள யாருக்கும் தெரியாம மறைத்து மறைத்து வைத்திருந்தேன் இவள நம்பி அந்த பொறுப்ப இவக்கிட்ட ஒப்படைத்தேன்...... ஆனா இவ......என்று சொல்லிக்கொண்டே அவளை முறைத்தான். 2நாட்களில் புகழின் உச்சத்தில் இருக்கணும்னு கனவில் இருந்தேன் ஆனா இன்னிக்கு வெளிநாட்டு கம்பெனில இருந்து எனக்கு அழைப்பு வந்தது எடுத்து பேசும் போது என்னோட ப்ராஜெக்ட நான் இன்னொருத்தனோட பெயருக்கு எழுதி கொடுத்தமாதிரியும் இப்போது அவன்தான் அதற்கு முதலாளி சொந்தக்காரன் என்றும் என்னோட பெயரும் கம்பெனியும் இந்த லிஸ்டில் இருந்து கேன்சல் ஆயிடிச்சி" என்றும் சொல்றாங்க.........நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? என்று தேம்பி தேம்பி அழுதான் வசந்த்.....!என்னோட ரகசியங்கள் எல்லாம் எப்படி வெளியில போச்சுதுன்னு என் கம்பெனில வேற யார்க்கிட்டயும் கேட்கமுடியாது ஏனென்றால்? யாருக்குமே இந்த தகவல்கள் எதுவும் தெரியாது இந்த ராட்சஷியை தவிர.... என்று மறுபடியும் அடிக்க சென்றான்!
என்ன ரியா வசந்த் சொல்றதெல்லாம் உண்மையா?என்று கேட்டான் விஜய்...!
ஆமா!நான் தான் அப்படி பண்ணினேன் உன்னோட தகவல்கள் ரகசியங்கள் எல்லாம் சேமித்து என் தோழிக்கிட்டதான் கொடுத்தேன் அவளுக்காகத்தான் இதெல்லாம் பண்ணினேன் எனக்கு பணமும் தேவை இல்லை நீயும் தேவை இல்ல என்னோட தோழியின் நிம்மதி சந்தோஷம்தான் முக்கியம் அதான் இப்படி பண்ணினேன் துரோகி நான் இல்ல நீதான்.........நீ பண்ணின பாவத்துக்கு தண்டனை அனுபவிச்சிட்டா......?இதுக்காகத்தான் நாங்க இவ்ளோ நாள் காத்துட்டிருந்தோம்........நீ நடுத்தெருவுல வருவான்னு தெரியும் ஆனா இவ்ளோ சீக்கிரம் வருவான்னு நினைக்கல என்று வெறுப்போடு பேசினாள் ரியா..... என்தோழிக்காக உன்ன பழிவாங்கதான் நாங்க இவ்ளோ நாள் காத்துட்டிருந்தோம்......இவ்வளவு இல்ல இன்னும் நீ நிறைய கஷ்டங்களை அனுபவிப்பா பெண்பாவம் உன்னை சும்மா விடாது என்று காளி மாதிரி கண்களை வைத்து பேசினாள் ரியா......
உனக்கு பைத்தியம்தான்டி, லூசு மாதிரி உளறுர நான் எதுக்கு நடுத்தெருவுல வரணும் உன் தோழிக்கு என்மேல என்ன கோவம் என்ன எதுக்கு பழிவாங்கணும் என்று புரியாதவனாய் கேட்டான்??????
உன் முன்னாள் காதலி ஆருயிர் வந்தனாவுக்காகதான் என்றாள்!
எந்த வந்தனா?எனக்கு யாரு காதலி?????