விடை தெரியாத வினாவாக
கரைகிறது காலம்
உறைகிறது உதிரம்
காதலோடும் கனவுகளோடும்
மாலையிட்ட மலர் வாடி
ஆண்டுகள் ஏழாகியும்
காத்திருகிறேன் ....!
நான்
கதற கதற கண் முன்னே
கட்டி சென்றார்கள் அவர்கள்
நீ கட்டிய தாலி
என்னும் கனமாகவே
கணம் கணமாய் உன்னை
எதிர் பார்கிறது....!
கண்கட்டி சுடப்பட்ட
காணோளி படங்ககளிலும்
சனல் 4 தந்த ஆவண படங்களிலும்
தேடிக் களைத்துக் களித்து விட்டேன்
கண்ணாளா நீ அதில் இல்லை
எனில்
எங்கோ உயிரோடு இருகிறாய் என
என் பேரோடு இணைந்திருந்த உன் பேரோ
இப்போது காணாமல் போகச் செய்தவர் பட்டியலில் ..
அடுத்த திருமணத்துக்கு எனை
தயார் செய்கிறாள்
என் தாய்.....
அவள் மீதும் குற்றமில்லை
வாலிப வலிய ஏழன பார்வைகள்
கொத்தி கிழிக்கின்றன........
விடை தெரியாத வினாவாக
உன் வருகையின் நிமித்தம்
ஊனுடன் ஒட்டியிருக்கிறது
எனதுயிர்............!