என்னவள் உறக்கம்

உலகமெங்கும் நிசப்தம் நிலவும்
ஓர் இரவு பொழுது
பசுமை படர்ந்த புல்வெளியில்
வளைந்து நெளிந்த மலர்க்கொடியில்
பனி தென்றல் வீசும் அந்நொடியில்
பனி போர்வை சூடி!
விழிமூடி கிடந்தாள் என்னவள்!
பொன் பதித்த அவள் செவி மடலில்!
என் நாசி மோதிட
மெதுவாக கூவினேன்
அவள் பெயரை
உரக்க கலக்கம்
அவள் விழி திறக்க மறுக்கும்
அந்நேரம் அவள்
இதழ்களில் இருந்து உதித்த
சொற்கள் எம்மொழி என்று
நான் அறியேன்!!!
அறியா, அம்மொழியை
மீண்டும் கேக்க துடிக்கின்றது என்செவிகள்
நான் காத்திருக்கிறேன்
என்னவள் மீண்டும் உறங்கும் அந்நேரதுக்காக..............

எழுதியவர் : ம மதியழகன் (15-Feb-16, 5:14 pm)
சேர்த்தது : Mathi Mani
Tanglish : ennaval urakam
பார்வை : 285

மேலே