காதலர் தின வாழ்த்து

நான் கருத்தரித்த கணமே காதலித்தவள்
என் உணர்வில் கலந்தவள்
நான் சுவாசிக்க அவள் சுவாசம் தந்தவள்
எங்கள் காதலை பகிர்ந்து கொள்ள தொப்புள்
கொடியை தொடர்பு சாதனமாக்கியவள்
தன் கருவறையை எங்கள் காதல்
சின்னமாய் அமைத்தவள்
என் உடல் பொருள் ஆவி அனைத்தையும்
காதல் பரிசாக அளித்தவள்
இது தான் உலகத்திலேயே முதல்
பார்க்காமல் வந்த காதல் என உணர்த்தியவள்
என்னை கண்ட கணமே கட்டி அணைத்து முத்தமிட்டவள்
"அவளுக்கு என் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள் "