மது சுவைஞர்கள் கழகம்

என்னடா புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சு இருக்கறாங்களாம்?

ஆமாண்டா டாஸ்மார்க் மது குடிக்கறவங்கெல்லாம் சேந்து மது சுவைஞர்கள் கழகம் -ன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்காங்களாம். அந்தக் கட்சிலே தமிழ் நாட்டில் உள்ள மதுப் பிரியர்கள் எல்லாம் உறுப்பினர்களாம். அவுங்க மது அருந்திட்டுத் தான் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போவாங்கலாம். “குடிச்சுட்டு ஓட்டு வேட்டைக்குப் போறீங்களே அதனால உங்க கட்சிக்கு பாதிப்பு ஏற்படாதான்னு” ஒரு நிருபர் அந்தக் கட்சியின் தலைவர் இளன்குடிமகன் என்பவரைக் கேட்டாராம். அதுக்கு இளங்குடிமகன் “ஏய்யா போன தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு கட்சியின் தலைவரே குடிச்சிட்டுப் பிரச்சாரத்துக்குப் போனதா டி,வில் எல்லாம் காட்டினாங்களே, அந்தக் கட்சிக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா? தமிழ் நாட்டு மக்கள் இழிச்சவாயர்கள் அய்யா. மேடையிலும் சினிமாவிலும் எதச் செஞ்சாலும் தவறா நினைக்காத உயர்ந்த பண்பு உள்ளவங்க”ன்னு சொன்னராம்.

இளங்குடிமகன் சொல்லறதும் நூத்துக்கு நூறு உண்மைடா. ஆபாசமா நடிக்கறவங்களைக் கூட தமிழ் மக்கள் இதய தெய்வமா ஏத்துக்கற போது குடிக்கறவங்க இதய தெய்வம் ஆகக் கூடாதா? இது ஜனநாயக நாடுடா.

சரியாச் சொன்னீடா சாத்தப்பா.

எழுதியவர் : மலர் (16-Feb-16, 3:07 pm)
பார்வை : 175

மேலே