என்றுமே வெற்றி கிட்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
என்றுமே வெற்றி கிட்டும்.
கரைந்தால்தானே ஒளிவெள்ளம்
காண இயலும் மெழுகுதிரியில்!
விரைந்தால்தானே குதிரைக்கு
வேகத்தில் வெற்றி கிட்டும்
உறைத்தால்தானே சந்தனம்
மணம் மணக்க செய்யும்!
கனிந்தால்தானே கனிகளின்
இனிப்பை சுவைப்போம்
விளைந்தால்தானே பூமியெங்கும்
பசுந்தளிர் பசுமையாகும்!
உழைத்தால்தானே உன்றனுக்கு
என்றுமே வெற்றி கிட்டும்!