உன்னால் முடியும் தோழா

வாழும் நாட்கள் சில காலம்-இதில்
வந்துபோகும் பல சோகம்....!
உன்னால் முடியாதென்று நினைத்து
முடங்கிவிடாதே மூலையிலே....!
எல்லாம் தொட்டுவிடும் தூரமே
துவண்டுவிடாதே வாழ்க்கையிலே....!!
எலும்பில்லா எறும்புகூட தன்
எல்லையை மீறி ஓடும்போது....
எல்லாம் கொண்ட நீ மட்டும்
தடம்புரண்டு நிற்கிறாய் ஏனோ....?
ஏழை ஜாதி நீயென்று
எண்ணிவிடாதே ஒருபோதும்....!
எரிமலையாய் பொங்கியெழு
உயர்வு உண்டு எப்போதும்.....!!
தொடர் முயற்ச்சி உனக்கிருந்தால்......
தொலைதூர வெண்ணிலவும் உன்
தோல்சாய ஆசை கொள்ளும்.....!
தோல்வியும் ஒப்புக்கொள்ளும் ஒரு நாள்..........
நான் உன்னிடம் தோற்றுவிட்டேனென்று....!!
-சதீஷ் ராம்கி