என்னவள்

பாற்கடல் அமுதினும்
சுவை மிகுந்த உணவை உண்டேன் ..
என்னவளின்
இதழ் பட்டு எனை அடைந்த போது!!...

என்னுடன் வந்த என் நிழல் கூட
இப்பொழுது எதிர் திசையில் செல்கிறது...
என்னவளை
பின்தொடர்ந்து !!..

புதைக்குழியில் கூட வீழ்ந்தெழுந்தேன்
ஆனால் எழவில்லை ...
என்னவளின்
கன்னக்குழியில் விழுந்த பின்பு !!..

தென்றல் கூட
மெதுவாய் கடந்து போகிறது .....
என்னவளின்
கூந்தலின் மெல்லிய அசைவை கண்டு !!...

கூர்வாளின் தீண்டலை விட
கூர்மையாய் தீண்டுகிறது.....
என்னவளின்
கருவிழி ஓர பார்வை !!...

எழுதியவர் : பிரதீப் நாயர் (17-Feb-16, 3:36 pm)
Tanglish : ennaval
பார்வை : 171

மேலே