சரியா தவறா என்னாசை

சரியா, தவறா..
என்று தெரியவில்லை...
என்னுள் ஆசை வந்தது...
கண் இமைக்கும் நேரத்திலும்...
கனவிலும் உன் நினைவு...
என்னில் எழுந்த எண்ணங்கள்...
நடந்திடுமா என ஏங்குகிறேன்...
தினந்தினம் துடிக்கிறேன் இன்று...
அன்று...
அறியா வயதில் நானெடுத்த படிப்பு.
படித்த போது பிடித்தது...
இன்று...
மனதிற்குள் சுகமில்லை...
பள்ளி செல்லும் குழந்தையை பார்த்திடும் போதும்...
குழந்தைகள் செய்யும் சாதனைகளை கேட்டிடும் போதும்..
என் உள்ளுணர்வு புலம்புகிறது...
மாற்றிய படிப்பால் மாறிய பணியால்..
அன்பான ஆசிரியர் பணியை தவறவிட்டேனே..
வருத்தமெல்லாம் என்னுள் உருவெடுத்து...
வடிவம் தந்திடுமா என் வாழ்விற்கு...
என் வாழ்க்கை துணையாவது..
ஆசிரியர் பணியில் வருவாளா என...
என்னாசை நடந்திடுமா...
என் மனமும் துடிக்கிறது....

எழுதியவர் : (17-Feb-16, 3:35 pm)
பார்வை : 100

மேலே